இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்கா பாராளுமன்ற குழுவினர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பீற்றர் ரொஸ்கம் தலைமையிலான 16 பேரடங்கிய குழுவினரே இவ்வாறு இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவ் விஜயத்தின் நோக்கம் இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவே இக் குழுவினர் இலங்கைக்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க விசேட விமானம் மூலம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாராளுமன்றக் குழுவினர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இலங்ககையில் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.