வட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் பெண்களால் கொல்லப்பட்ட சம்பவம் : வெளியானது பரபரப்பு சிசிரிவி காட்சி

Published By: Raam

20 Feb, 2017 | 04:02 PM
image

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நாம் விமான நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட அதிர வைக்கும் சிசிரிவி வீடியோ வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன் வட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் கிம் ஜோங் நாம் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மலேசியா பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் சில பெண்கள் உட்பட பலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐப்பான் தொலைகாட்சியொன்று கிம் ஜோங் நாம் கொல்லப்படும் சிசிரிவி காட்சியை வெளியிட்டுள்ளமை மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அதில், விமான நிலையத்தில் கிம் ஜோங் நாம்யிடம் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டிருக்கின்ற போது, திடீரென வியட்நாமை சேர்ந்த பெண் ஒருவர் நாமின் வாய்க்குள் எதையே வைத்து திணிக்கிறார்.

இதனையடுத்து, அந்த பெண் சாதாரணமாக அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார். எனினும், குறித்த பெண் தற்போது மலேசியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47