முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் மீதான தடைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் ஜுலை மாதம் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி விஜித் மலகொட இன்று (20) பிறப்பித்துள்ளார்.

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் மீதான தடை நீக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூவரால் மேற்கொள்ளப்பட்ட மனு தொடர்பிலான விசாரணையின் போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.