எந்­த­வொரு மதமும் தீவி­ர­வாத மத­மல்ல என பாப்­ப­ரசர் பிரான்சிஸ் தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்தில் மொடெஸ்ரோ பிராந்­தி­யத்தில்  இடம்­பெற்ற கத்­தோ­லிக்க மத­கு­ரு­மாரின் கூட்­டத்தில் வாசிக்கப்­பட்ட கடி­தத்­தி­லேயே பாப்­ப­ரசர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

மேற்­படி கூட்­டத்தில் மத­கு­ருமார், சமூக நீதி செயற்­பாட்­டா­ளர்கள் உட்­பட சுமார் 600  பேர் கலந்து கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.  

"இங்கு கிறிஸ்­தவ தீவி­ர­வாதம் கிடை­யாது. யூத தீவி­ர­வாதம் கிடை­யாது. அத்­துடன் முஸ்லிம் தீவி­ர­வா­தமும் கிடை­யாது" என பாப்­ப­ரசர் அந்தக் கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

அனைத்து மக்கள் மற்றும் மதங்­களில் வன்­மு­றை­மிக்க தனி­ந­பர்கள்  உள்­ள­தா­கவும் அவர்­களே தீவி­ர­வா­தத்­துக்கு காரணம் எனவும் பாப்­ப­ரசர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

தேவைப்­பா­டு­டை­ய­வர்­க­ளுக்கு  மனப்­பூர்­வ­மான உதவ வேண்டும் என அவர் அந்தக் கடி­தத்தில் அழைப்பு விடுத்­துள்ளார்.

மேற்­படி கடி­தத்தில் பாப்­ப­ரசர் எவ­ரையும் குறிப்­பிட்டு குற்­றச்­சாட்டை முன்­வைக்­கா­விட்­டாலும் அவ­ரது அந்தக் கடிதம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் முஸ்லிம்களுக்கு எதிரான குடியேற்றக் கொள்கையை கண்டிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத்  தெரிவிக் கப்படுகிறது.