அப்புத்தளை நகரில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையின் போது மூன்று பஸ் அடங்கலாக 13 வாகனங்களை வீதியில் ஓடத் தடைவிதித்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் 80 பேருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். 

பதுளை போக்குவரத்து ஆணையாளரும் அப்புத்தளை போக்குவரத்து பொலிஸாரும் இணைந்து நடத்திய வாகன சோதனையின் போது மூன்று பஸ் வண்டிகளும் பத்து லொறிகள் அடங்கலாக பதின்மூன்று வாகனங்களை வீதியில் ஓடத் தடை விதித்துள்ளதாக தெரிவித்தனர். 

இது தவிர ஏனைய குற்றச்சாட்டுகளின் பேரில் ஒன்பது பேருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளதாகவும் அவர்களுள் மது பாவனை மற்றும் வீதி ஒழுங்குகளை மீறியவர்களும் அடங்குவதாகவும் தெரிவித்தனர்.