உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதியினை அறிவிக்காமல், காலம் தாழ்த்துவதானது பிரச்சினைக்குரிய விடயம் என ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதன் பின்னரும் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படாமல் இருப்பது சிறப்பானது அல்ல.

தேர்தலை காலம் தாழ்த்துவது அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பினும், குறித்த விடயம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.