பருத்தித்துறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞர் மிகச்சிறந்த ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனர் என தெரியவந்துள்ளது.

யாழ். நகரைச் சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.

மூன்று மாதங்களுக்கு முன், சஞ்சீவ் தன் ‘‘Drone Camera’’ மூலம் ‘ஒரு பறவையின் பார்வையில்’ என்ற தலைப்பில் யாழ். மண்ணின் அழகைப் படம்பிடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இளைஞர் வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறை வீதி, குஞ்சர் கடைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அத்துடன் குறித்த விபத்துக்கு அதி வேகமே காரணம் என்றும், உழவு இயந்திர சாரதி படு காயமடைந்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.