மெதிகிரிய பிரதேசத்தின் காட்டுப்பகுதியிலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் சடலம் நேற்று (17) இரவு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட இளைஞர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப்பகுதிக்கு வேட்டையாடுவதற்கு செல்லும் நபர்களால் குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் மெதிகிரிய பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.