எல்பிட்டிய - திவிதுரவத்த பகுதியில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றை வைத்திருந் இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பில் விசாரணை மேற்கொண்ட போதே குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 24 வயதானவர்கள் என தெரியவந்துள்ளது.

வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 9 எம்.எம். ரக துப்பாக்கியொன்றுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்களை இன்று எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.