பிரச்­சி­னைகள் இல்­லாமல் தீர்வோ அல்­லது புரட்­சியோ ஏற்­பட்­ட­தில்லை. இப்­போதும் பல பிரச்­சி­னைகள்  சுகா­தா­ரத்­து­றையில்  நில­வு­கின்­றன.எனினும் கண்­வில்­லை­க­ளுக்­கான விலையை குறைக்க கிடைத்­தமை பாரிய வெற்­றி­யாகும் அந்த வகையில் 26900 ரூபாவாகவிருந்த கண்வில்லை தற்போது 17 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்ப்டுள்ளது என்று  என சுகா­தார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

சுகா­தார அமைச்சில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­ளாளர் சந்­திப் பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஏற்­க­னவே 48 வகை­யான மருந்­து­க­ளுக்கு விலை நிர்­ணயம் செய்­யப்­பட்டு விலைக்­கு­றைப்பும் செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் தற்­போது கண்­வில்லை மற்றும் கண்­வில்லை சார்ந்த மருந்­துப்­பொ­ருட்­க­ளுக்கும் விலை நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ளமை மாபெரும் வெற்­றி­யாகும். 

மருந்­துப்­பொ­ருட்­க­ளுக்கு விலை நிர்­ணயம் செய்­வது எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னது என்­பதை உலக நாடுகள் பலவும் உணர்ந்­துக்­கொண்­டுள்­ளன. ஆனால் நாம் முன்­கூட்­டியே மருந்­துப்­பொ­ருட்­க­ளுக்கு விலை நிர்­ணயம் செய்­தி­ருப்­பது மிகவும் வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும்.

இத­ன­டிப்­ப­டையில் 26900 ரூபாய் கண்­வில்லை 17000 ஆகவும் 25900 ரூபாய் கண்­வில்லை 16600 ஆகவும் 28000 ரூபாய் கண்­வில்லை 18200 ஆகவும் 25900 ரூபாய் கண்­வில்லை 15500 ஆகவும் 25000 ரூபாய் கண்­வில்லை 15000 ஆகவும் 25000 ரூபாய் கண்­வில்லை 12100 ரூபா­வா­கவும் குறைக்­கப்­பட்­டுள்­ளன.  இவ்­வாறு 38 வகை­யான கண்­வில்­லை­களின் பொருட்­க­ளுக்கு விலைக்­கு­றைப்பு செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

மருத்­துவம் என்­பது சேவை­யாகும் என்ற வகையில் அனைத்து வகை­யான அரச வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கும் குறித்த விலைக்­கு­றைப்பு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இது­வ­ரையில் குறித்த விலைச்­சூத்­தி­ரத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்தோம். இவ்­வு­லகில் பிரச்­சினை ஒன்று தோன்­றாமல் மாற்றம் ஒன்று நிகழ்ந்­தி­ருக்க முடி­யாது. அது­போ­லவே ஒரு மாற்­றத்தை அடைய பல பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள நேரிடும். அவற்றை நாம் வெற்­றிக்­கொள்ள வேண்டும்.

லெனின் ஆட்­சிக்­கா­லத்தில் பல வகுப்பு சமூ­கத்தை மாற்றி ஒரே குடை­யின்கீழ் அனை­வ­ரையும் இணைத்தார். அவர் அந்த புரட்­சியை அடை­வ­தற்கு பல பிரச்­சி­னை­களை சந்­தித்­தி­ருந்தார். அவ்­வ­ளவு அபி­வி­ருத்தி அடைந்த சமூ­கத்தில் பலம் பொருந்­திய படையை கொண்ட நாட்டில் அவ்­வ­ளவு பிரச்­சி­னைகள் தோற்­று­விக்­கப்­பட்­ட­தென்றால் நாம் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் அவ்­வ­ளவு பார­தூ­ர­மா­ன­தாக இருக்க முடி­யாது. அந்த பிரச்­சி­னை­களை சந்­திக்க நாம் தயா­ரா­க­வுள்ளோம்.

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் சுகா­தார அமைச்­ச­ராக இருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுகா­தா­ரத்­து­றையை பாது­காப்­ப­தற்கு பல வேலைத்­திட்­டங்­களை கொண்டு வர முயற்­சித்தார். ஆனால், அதற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ முழு­மை­யாக இடம்­கொ­டுக்­க­வில்லை. ஆனால் இப்­போது நான் சுகா­தார அமைச்­ச­ராக இருக்­கின்­ற­போது அந்த பிரச்­சினை இல்லை. எனக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­கின்றார். ஆகவே, பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ளும் வல்­லமை என்­னிடம் உள்­ளது.

இந்­நாட்டில் ஊட­கங்­களும் பிரச்­சி­னை­களை பற்றி விமர்­சிக்­கின்­றனவே தவிர நாம் செய்யும் நல்ல விட­யங்­களை மக்­க­ளுக்கு கொண்டு சேர்ப்­ப­தில்லை. இவ்­வ­ரு­டத்தை உலக சுகா­தார தாபனம் புகைத்­த­லுக்கு எதி­ரான வரு­ட­மாக பெய­ரிட்­டுள்­ளது. புகைத்­தலை ஒழிப்­ப­தற்­காக ஒரு ட்ரில்­லியன் பணத்தை செல­வ­ழிக்­கின்­றது. இலங்­கை­யிலும் கூட வரு­டத்­துக்கு 25000 பேர் வரையில் புகைத்­தலால் இறக்­கின்­றனர். எனவேஇ நல்­லாட்சி அர­சாங்­கத்தில் புகைத்­தலை இல்­லா­ம­லாக்க வேண்டும் என்­ப­தற்­காக புகை­யி­லைசார் பொருட்­க­ளுக்கு 90 வீதம் வரையில் வரியை அதி­க­ரித்­தி­ருந்தோம். 

இந்­நி­லையில் இதற்­கெ­தி­ராக நாட்­டுக்கு பல மில்லியன் நட்டம் ஏற்படும் என தெரிந்தும் இந்த முடிவை எடுத்தோம். அமைச்சரவையிலும் கூட எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். புகையிலைசார் பொருட்களை அவர்களின் பேச்சைக் கேட்டு நிர்ணயித்திருந்தால் 269 மில்லியன் இலாபம் கிடைத்திருக்கும். அந்த இலாபத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் எதிர்ப்பார்க்கவில்லை. எனவே நாம் நினைக்கும் மாற்றம் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் வெற்றியளிக்கும் என்றார்.