முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு  பகுதியில் நேற்று 14 கிலோ 250 கிராம் கேரளா கஞ்சாவை தன்னுடைய உடைமையில் வைத்திருந்த குற்றத்திற்காக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது  குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.