தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் தோட்டப் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் பரவிய காட்டு தீயால் சுமார் 8 ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகிள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீ பரவலை கட்டுப்படுத்த முடியாது போயுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். 

சுமார் 30 ஏக்கர் பரப்பு கொண்ட காட்டுப் பகுதியிலேயே குறித்த காட்டுத் தீ பரவியுள்ளதாகவும், மேலும் குறித்த காட்டுத் தீயினால் குடியிருப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.