கண்டியில் தனது 3 வயது குழந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ய முயன்றதுடைன் 35 வயதுடைய குறித்த தந்தையும் தன்னை தானே கூரிய ஆயுதத்தால்  தாக்கி  தற்கொலைக்கு முயன்ற நிலையில் இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த குழந்தை கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது மனைவியுடன் ஏற்பட்ட கடும் வாக்குவாதமே இந்த விபரீத முடிவுக்கு காரணம் என பொலிஸ் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கண்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.