SAITM மாணவர்களுக்காக நீதி கோரும் இலங்கை தனியார் மருத்துவ கல்லூரி பெற்றோர் சங்கம்

Published By: Priyatharshan

17 Feb, 2017 | 01:42 PM
image

தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ள தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்வியகம் (SAITM) தொடர்பான பிரச்சினையை சுமூகமாக தீர்வு காண்பதுடன் குறித்த கல்வியகத்தில் கல்வி பயிலும் மற்றும் பயின்ற மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்க வேண்டாமென சம்பந்தப்பட்ட சகல தரப்பினரிடமும் இலங்கை தனியார் மருத்துவ கல்லூரி பெற்றோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சட்டபூர்வ அமைப்பாக இலங்கை தனியார் மருத்துவ கல்லூரி பெற்றோர் சங்கம் திகழ்வதுடன் இதில் 300 க்கும் அதிகமான புகழ்பெற்ற நிபுணர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கையில் தனியார் மருத்துவ கல்வியை ஊக்குவிப்பது மற்றும் பாதுகாப்பது போன்றன இந்த அமைப்பின் பிரதான குறிக்கோள்களாக அமைந்துள்ளன.

SAITM சத்திரசிகிச்சைகளுக்கான பேராசிரியர். நெவில் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்>

“இலங்கையில் காணப்படும் இதர பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் SAITM தரம் சீரானதாக அமைந்துள்ளது. அரச மருத்துவ பீட மாணவர்களுக்கு இரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக பயிற்றுவித்த நான் MBBS பட்டத்தை பூர்த்தி செய்தவர்கள் சிறந்த வைத்தியர்களாக திகழ்வார்கள் என நம்பிக்கையுடன் தெரிவிக்க முடியும்” என்றார்.

SAITM மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் சார்பாக கருத்துக்களை வெளியிட்ட இந்த பெற்றோர் சங்கம் பல தடைகளை கடந்து கடுமையான பரீட்சைகளில் தோற்றி சித்தியெய்தியுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்காமல் அவர்களுக்கு வைத்தியராக திகழ்ந்து தேசத்துக்கு சேவையாற்ற காணப்படும் உரிமையை பெற்றுக்கொடுக்க உதவுமாறு கோரியுள்ளது.

பெற்றோர் சங்கத்தின் தலைவர் பி.எம்.பி.கே.தென்னகோன் கருத்துத் தெரிவிக்கையில்>

“2009ம் ஆண்டில் SAITM தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. இந்த மாணவர்கள் இலங்கையர்கள் உள்நாட்டைச் சேர்ந்த கல்வியகமொன்றில் தமது உயர்கல்வியை பூர்த்தி செய்ய இந்த மாணவர்கள் தீர்மானித்தார்கள். குறிப்பிட்ட குறைகளை நிவர்த்தி செய்வதற்கு கல்வியகத்துக்கு உதவ முன்வருமாறு இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மருத்துவ சங்கத்திடம் நாம் கோரிக்கைவிடுக்கிறோம்.

எதிர்ப்பு வெளியிடுவது மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது போன்றன இலங்கையின் கல்விக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது” என்றார்.

இந்த பெற்றோர் சங்கத்தின் மூலமாக இலங்கையில் தனியார மருத்துவ கல்வி மற்றும் SAITM விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சந்திப்பு ஒன்றை கோரி கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஆணைக்குழு சகல தரப்பினருடனும் கலந்தாலோசனை நிகழ்த்தி அரசாங்கத்துக்கு SAITM தொடர்பில் ஆலோசனை வழங்கவுள்ளது. பெற்றோர் சங்கத்தின் செயலாளர் அனுர தனரட்ன SAITM MMBS பட்டங்களின் சட்டபூர்வ தன்மை குறித்து கருத்துத்தெரிவிக்கையில்,

“ஜனவரி 31ம் திகதி இலங்கையின் இரண்டாவது உச்ச நீதிமன்றமான மேன்முறையீட்டு நீதிமன்றம், SAITM ல் கற்கைகளை பூர்த்தி செய்த MBBS பட்டதாரிகளுக்கு இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவுகளை மேற்கொள்ள தகைமை காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தது.

இந்த தீர்மானத்தை இலங்கை மருத்துவ சங்கம் நிராகரிக்குமாயின் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த குற்றச்சாட்டுக்கு முகங்கொடுக்க நேரிடும்” என்றார்.

பெற்றோர் சங்கத்தின் பொருளாளர் டபிள்யு.பி.சமரகோன் கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் காண்பிக்கும் முயற்சிகளை நாம் பெரிதும் வரவேற்கிறோம். எமது மாணவர்கள் அரச துறையில் பயிலும் மாணவர்கள் முகங்கொடுக்கும் பரீட்சைக்கு தோற்றுவதில் எவ்வித எதிர்ப்புகளும் இல்லை. SAITM மாணவர்கள் மட்டும் ஒரு பரீட்சைக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பதற்கு எம்மால் உடன்பட முடியாது.

இந்த விடயம் தீர்க்கப்படும் வரை மாணவர்களை SAITM இல் இணைத்துக்கொள்ள முடியாது என்பதற்கும் நாம் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என்றார்.

இலங்கையில் மேலும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான தேவை காணப்படுகிறது என்பதை வலியுறுத்திய இந்த சம்மேளனம், பிராந்தியத்தில் காணப்படும் ஏனைய நாடுகளை உதாரணங்களாக முன்வைத்திருந்தன. அந்நாடுகளில் பெருமளவு தனியார் மருத்துவ கல்லூரிகள் அரச கல்லூரிகளை விட அதிகளவில் காணப்படுகின்றன.

இலங்கையிலும் இந்த நிலை ஏற்படுவதற்கு வழிகோலுமாறு இந்த சம்மேளனம் கோரியுள்ளதுடன் உயர் தரங்களை பேணுவதற்கு பக்கசார்பற்ற அமைப்பொன்றை உருவாக்குமாறும் கோரிக்கைவிடுத்துள்ளது. அரசாங்க அனுமதிகள் மற்றும் ஒழுக்க நெறிமுறைகளின் பிரகாரம் SAITM  நிறுவப்பட்டுள்ளது என்பதை இந்த பெற்றோர் சங்கம் வலியுறுத்துவதுடன் அனைவருக்கும் மருத்துவ கல்வியை பெறுவதற்கான உரிமை காணப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளது.

அந்நியச்செலாவணியை சேமித்துக்கொள்ள உதவுவதுடன் சுகாதாரத்துறையின் தரத்தை மேம்படுத்தவும் உதவியாக அமைந்திருக்கும் எனவும் இந்த சம்மேளனம் அழைப்புவிடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31