திருகோணமலை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவருடைய ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை, மிரஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய கடற்படை வீரரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.