அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கும் இலங்­கைக்கும் இடையில் விளை­யாட்டுத் துறைசார் அபி­வி­ருத்தி உடன்­ப­டிக்­கை­யொன்று நேற்­று­முன்­தினம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது.

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு நான்கு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டுள்ள இலங்கை பிர­தமர் ரணில் விக்கி­ர­மசிங்­கவிற்கும்இ அவுஸ்­தி­ரே­லி­யாவின் பிர­தமர் மல்கம் டர்ன்புல் ஆகி­யோ­ருக்குமிடையில் இடம்­பெற்ற உத்­தி­யோ­க­பூர்வ சந்­திப்பு மற்றும் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தையின் பின்னர் இந்த உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளன.

விளை­யாட்டுத்துறைசார் அபி­வி­ருத்தி உடன்­ப­டிக்­கையில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் விளை­யாட்டு மற்றும் சுகா­தார அமைச்சர் கிரேக் ஹர்ன் மற்றும் அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர ஆகியோர் கைச்­சாத்­திட்­டனர்.

இந்த உடன்­ப­டிக்­கையின் படிஇ இலங்­கையின் விளை­யாட்­டுத்­து­றையை அபி­வி­ருத்தி செய்யும் நோக்கில் விளை­யாட்­டுத்­து­றைசார் பயிற்­று­விப்­பா­ளர்கள், முகா­மை­யா­ளர்கள், வைத்­திய ஆலோ­ச­கர்கள், விளை­யாட்­டுத்­துறை நிபு­ணர்­க­ளுக்கு சர்­வ­தேச தரத்­தி­லான பயிற்­சி­களை வழங்­கு­வ­தற்கும்இ அவற்றை பரிமாற்றம் செய்வதற்கும்இ இருதரப்பு ஊக்கமருந்து பாவனை தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.