சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்கு பயணிக்க இருந்த எட்டு பேர் நேற்றிரவு நீர்கொழும்பு கதிரான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, மாரவில, கல்முனை மற்றும் முல்லைத்தீவு பகுதிளைச் சேர்ந்த, 23 தொடக்கம் 42 வயக்கு இடைப்பட்ட நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நீர்கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

புகலிடம் கோரி சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக பயணிக்கும் நபர்கள் முன்னர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வந்த நிலையில், நீண்டகாலத்திற்கு பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.