வீதிகளில் நாய்களை விட்டு செல்பவர்கள் மற்றும் வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு எதிராக ரூபாய் 25 ஆயிரம் அபராதம் மற்றும்  6 மாத சிறைத் தண்டனையும்  விதிப்பதற்கு சட்டத்தை உருவாக்கவுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் நாய்களை கொண்டு வந்து விட்டு செல்லும் நபர்களை இனங்கண்டு கொள்ளுவதற்கு சிசிரிவி கெமராக்களையும் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.