கொழும்பின் முன்னணி பாடசாலைகளான ஆனந்தா, நாலந்தா மற்றும் டி.எஸ்.எஸ். சேனாநாயக்க வித்தியாலய அதிபர்கள் இன்று கல்வியமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

நேற்று பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கல்வியமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் மீண்டும் இவ்வாறான மோதல் சம்பவங்கள் இடம்பெறுமாயின் அதற்கு பாடசாலை அதிபர்களே பொறுப்பேற்க வேண்டும் என கல்வியமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மோதல் சம்பவம் காரணமாக 8 மாணவர்கள் காணமடைந்ததுடன், 15 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.