மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இன்று (16) மோட்டார் குண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

தோம்புதர் வீதி கதிரவெளியில் உள்ள நபரொருவரின் காணியில் இருந்து குறித்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி நபர் தமது காணியை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது நிலத்தில் புதையுண்ட நிலையில் மர்மப் பொருட்கள் தென்பட்டதனை கண்ணுற்று வாகரை பொலிஸாருக்கு இது தொடர்பாக தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இடத்துக்கு வருகைத்தந்த பொலிஸார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 5 மோட்டார் குண்டுகளும் அவை வைக்கப்பட்டிருந்த உறையும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.