மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிவுக்குற்பட்ட பகுதியில் இன்று (16) கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கல்குடா காளி கோயில் வீதி ஓரத்தில் மர்மப் பொருள் ஒன்று காணப்படுவதனை அறிந்த பொதுமக்கள் அது ஒரு வெடிப்பொருளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அருகில் உள்ள பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அது கைக்குண்டு என அடையாளம் கண்டுள்ளதுடன், குண்டு செயலிக்கும் இராணுவப் பிரிவினருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து அவர்கள் அதனை அவ்விடத்தில் இருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.