திருகோணமலை நகரின் மடத்தடி சந்திப்பகுதியில் உள்ள ஆலயமொன்றிலிருந்து உயிர்ப்புள்ள 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கைக்குண்டுகள் ஆலயத்தின் பாவனைக்குதவாத பொருட்கள் வைத்திருக்கும் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கைக்குண்டுகள் எவ்வாறு ஆலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதென்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர்.