நான் திடீரென செல்வந்தனானவன் அல்ல. ஆரம்பத்திலிருந்தே என்னுடைய உழைப்பினால் செல்வந்தன் ஆனவன். ஆகவே, உங்களுக்கு எனது சொத்துடைமைபற்றிய விபரம் தேவையாயின் பாராளுமன்றத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுகர்வோர்  உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தினால் ரவிகருநாணயக்கவின் சொத்துடைமை பற்றிய விபரம் கேட்கப்பட்டுள்ளது, அதற்கு நீங்கள் என்ன பதிலளிக்கப்போகின்றீர்கள் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு,

எனக்கு 24  வருட அரசியல் வரலாறு இருக்கின்றது. நான் திடீரென செல்வந்தனானவன் அல்ல. ஆரம்பத்திலிருந்தே என்னுடைய உழைப்பினால் செல்வந்தன் ஆனவன். ஆகவே, உங்களுக்கு எனது சொத்துடைமைபற்றிய விபரம் தேவையாயின் பாராளுமன்றத்திற்கு சென்று  25 ரூபா செலுத்தி எனது சொத்து விபரங்களை அறியமுடியும் நிதியமைச்சர்  ரவிகருணாநாயக்க பதிலளித்தார்.