கேப்பாப்புலவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  4 வயது குழந்தையான சதீஸ் கதிசனா தனது பிறந்தநாளை வீதியோரத்தில் கேக் வெட்டிக் கொண்டாடிய சம்பவம் அனைவரது மனங்களையும் உருக செய்துள்ளது.

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்கவேண்டுமெனக் கோரி கடந்த 17 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.இந்த நிலையில் இந்தப் போராட்டக்களத்தில் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என  அனைவரும் வீதியையே தமது வீடாக்கி போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  4 வயது குழந்தையான சதீஸ் கதிசனா தனது பிறந்தநாளை வீதியோரத்தில் கேக் வெட்டிக் கொண்டாடிய சம்பவம் அனைவரது மனங்களையும் உருக செய்துள்ளது.

தமது சொந்த நிலத்தில் வாழ்திருந்தால் இவ்வாறு வீதியில் பிறந்தநாளை கொண்டாட வேண்டிய தேவை இருக்காது எனவும் இந்த இராணுவமும் அரசும் எம்மை வீதியில் நாய்களாக விட்டு வேடிக்கை பார்த்துவருகின்றது என்றும் இந்த குழந்தை வீதியில் பிறந்த தினத்தை  கொண்டாடுவதை பார்த்தாவது ஜனாதிபதி  மனமிரங்கவேண்டும் என்றும் சிறுமியின் தாயார் தெரிவித்தார்.