(எம்.எம்.மின்ஹாஜ்)

மோசடி செய்தவர்கள் எங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்கின்றனர். எனவே அவரை நான் நீதிமன்றத்தின் ஊடாக அனுகவுள்ளேன். ஆகவே உதய கம்மன்பிலவிற்கு எதிராக அவதூறு வழக்கினை தாக்கல் செய்யவுள்ளேன் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி மோசடி தொடர்பில் தூய்மையான  ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில நேற்று இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் எனக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னைய ஆட்சியின் போது நெருக்கடிமிக்க பொருளாதாரத்தையே எம்மிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர். பாரிய கடன் சுமை இருந்தது. எனவே நெருக்கடிமிக்க பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது என்பது சாதாரண விடயமல்ல. பெரும் பாரதூரமானது. ஆகவே அதற்கு அதிக காலம் தேவைப்படுகின்றது. 

முன்னைய ஆட்சியின் போது பல்வேறு மோசடி செய்தவர்கள் கடன்சுமையில் இருந்து நாட்டை மீட்கும் எமக்கு குற்றம் சுமத்துவதனை ஏற்க முடியாதென இன்று கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.