யுத்தத்தில் பாதிக்கப்பட்ட விதவைகள் அதிகாரிகள், இராணுவத்தினரால் துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கப்படுகின்றனர் : சந்திரிக்கா அதிர்ச்சி தகவல்

Published By: MD.Lucias

16 Feb, 2017 | 12:38 PM
image

யுத்தத்தில் உயிர்தப்பிய பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சந்திரிக்கா,

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகள், தமது ஊரிலேயே உள்ள சில அதிகாரிகள் மற்றும் சில இராணுவத்தினரால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

குறிப்பாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட விதவைகள் ஒரு விடயத்தை செய்து கொள்ள, பிரதேச அதிகாரிகளால் பாலியல் இலஞ்சமாக பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்த பாலியல் வன்கொடுமைகள் இன்னும் இடம்பெறுகின்றன. குறிப்பாக கிராமசேவக அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை இந்த பாலியல் துஷ்பிரயோகங்களை செய்கின்றனர். ஒரு ஆவணத்தில் கையொப்பம் இடுவதற்கு கூட பாலியலை இலஞச்சமாக கேட்கின்றனர். இதில் இராணுவத்தினரும் உள்ளடக்கம்.

பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டால் இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்படாது.

பாலியல் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இன்னமும் அதிர்ச்சியில் உள்ளனர். அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு குறித்த பெண்களுக்கு உளவியல் ரீதியிலான சிகிச்சை தேவை. ஆனால் உளவியல் சிகிச்சையளிக்க   நாட்டில் போதுமான நிபுணர்கள்  இல்லை.

வெளிநாட்டில் இருந்து உளவியல் சிகிச்சை தொடர்பான நிபுணர்களை வரவழைத்தாலும் கூட பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொழி பிரச்சினை ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17