ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு

Published By: Raam

16 Feb, 2017 | 12:56 PM
image

தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அதிகாரப்பூரமாக அழைப்பு விடுத்துள்ளார். 

இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்கிறார். 

மேலும் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிட்டுள்ளார். அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வான எடப்பாடி பழனிச்சாமி தமக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி வந்தார். 

இடைக்கால முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தமக்கு பெரும்பான்மை இருக்கிறது; சட்டசபையில் நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என ஆளுநரிடம் தொடர்ந்து வலியுறுத்தினார்.

இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்திருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

இச்சந்திப்பின் முடிவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். இன்று மாலை 4 மணிக்கு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க உள்ளார். 

அத்துடன் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் 2 வாரங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13