முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள, கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பில் விமானப்படையின் கட்டுப்பாட்டில்  உள்ள, 84 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றி இன்றுடன் பதினேழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் விடுவிக்கப்படும் என்ற   உறுதி மொழியை நிராகரித்த மக்கள், தமது சொந்த நிலங்களில் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடருமென தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்துக்கு வருபவர்களையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களையும் விமானப்படையினர் தொடர்சியாக புகைப்படம் எடுத்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.