தமிழக ஆட்சியை தீர்மானிப்பதற்கு ஆளுனருக்குள்ள ஐந்தே வழிகள்..!

Published By: Selva Loges

15 Feb, 2017 | 12:36 PM
image

தமிழக முதலமைச்சரை தெரிவு செய்வது தொடர்பாக நிலவி வந்த குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்கு, தமிழக ஆளுனர் வித்தியாசாகர் ராவிற்கு ஐந்து வழிகள் உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

அ.தி.மு.க. கட்சி தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் இருந்த சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், அவரால் இனி முதலமைச்சராக தெரிவாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டு, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் உரிமையை அவர் கோரி வருகின்றார். 

இந்நிலையில் முதலமைசசர் பன்னீர்செல்வம், தனக்கும் பெரும்பான்மை இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரிவருகிறார். இவர்கள் இருவரில் ஒருவரை ஆட்சி அமைக்க கோர வேண்டிய கட்டாயம் தற்போது தமிழக ஆளுனருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் உரிமை கோரிய நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வரை ஆளுனர் காத்திருக்கவேண்டிய நிலை உருவாகியிருந்தது.

மேலும் தற்போதைய சசிகலாவுக்கான தீர்ப்பு, கட்சியின் புதிய தலைவர், முதல்வர்   பன்னீர்செல்வதின் கோரிக்கை என்பன அடிப்படையில் ஆளுனர், ஐந்து வகையான முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக, இந்திய அரசியல் மற்றும் சட்ட வல்லுனர்கள் கூறுவதாக இந்திய ஊடகங்கள் பகிர்ந்துள்ள தகவல்களானவை:  

1. எடப்பாடி பழனிச்சாமி தனக்கு அதிக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக மனுவொன்றை கொடுத்திருப்பதால் அதில் ஆளுனர் திருப்தியடைந்து எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கலாம். அதன்படி எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பதவி ஏற்கலாம்.

2. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் புகார் கூறுவதால் அதையும் ஆளுனர் கவனத்துக்கு எடுத்து கொள்ளலாம். ஆனாலும் இதுவரை ஓ. பன்னீர்செல்வம் தனக்கு போதிய எம்.எல்.ஏ.கள் ஆதரவு இருப்பதை காட்டாததால், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்து பதவி ஏற்றதும், உடனடியாக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கூறலாம்.

3. எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால், அதே சமயம் ஓ.பன்னீர் செல்வம் தனக்கு 117 சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை நிரூபித்தால் ஓ.பன்னீர் செல்வத்தை ஆட்சி அமைக்க கோரலாம்.

4. எடப்பாடி பழனிச்சாமிஇ ஓ.பன்னீர்செல்வம் இருவருமே பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால், அதே சமயம் பன்னீர்செல்வம் அணியினர், தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி செல்லும் எண்ணிக்கை, அரைவாசிக்கு மேற்பட்ட உறுப்பினர்களாக இருந்தால் தி.மு.க.வை ஆட்சி அமைக்க கோரலாம்.

5. எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் பெரும்பான்மையை நிரூபிக்க தவறி விடும் அதே நேரத்தில் தி.மு.க.வுக்கும் அவர்கள் ஆதரவு தெரிவிக்காவிட்டால், ஆளுனர் 365 சட்டத்தின் படி தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை உருவாக்கலாம். 

மேலும் 6 மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சி  நீடிப்பதோடு, அதற்குள் ஏதாவது ஒரு கட்சி பெரும்பான்மையை காட்டினால் அவர்கள் ஆட்சி அமைக்கலாம். அப்படியும் ஆட்சி அமையவில்லை என்றால், ஆளுனர் சட்டசபையை கலைக்க உத்தரவிடுவார்.பின் தமிழ்நாட்டில் புதிய சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33