“ ‘உடனடியாக’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?” சசிகலா தரப்பு சட்டத்தரணியிடம் நீதிபதி கேள்வி

Published By: Devika

15 Feb, 2017 | 11:08 AM
image

சரணடைவதற்கு மேலும் சிறிது அவகாசம் கேட்ட சசிகலாவுக்கு நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், உடனடியாகச் சரணடையுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சசிகலா இருபத்து நான்கு மணிநேரத்தினுள் சரணடைய வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். அதன்படி, இன்று காலை 10.30 மணிவரை அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நேற்று முன்தினம் முதல் கூவத்தூரில் தனது எம்.எல்.ஏ. ஆதரவாளர்களுடன் தங்கியிருக்கும் சசிகலா, தீர்ப்பையடுத்து தனக்குப் பதிலாக எடப்பாடி பழனிச்சாமியை அவைத் தலைவராக நியமித்ததுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறார்.

தீர்ப்பின்படி, சரணடைய வேண்டிய கால அவகாசம் நிறைவுறும் தறுவாயில், சசிகலாவின் உடல் நிலையைக் காரணமாகக் காட்டி மேலதிக அவகாசம் கேட்டு சசிகலா தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் ஆஜரானார்.

ஆனால், அதற்கு அனுமதி மறுத்த நீதிபதிகள், சசிகலாவை உடனடியாகச் சரணடையுமாறு ஆணையிட்டதுடன், “உடனடியாக என்ற வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியும் அல்லவா?” என்றும் சட்டத்தரணியைக் கேட்டனர்.

இதையடுத்து, இன்று மாலைக்குள் சசிகலா நீதிமன்றில் சரணடைவார் எனத் தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59