சொத்துக் குவிப்பு மையமாகத் திகழ்ந்தது போயஸ் கார்டன் வீடு: தீர்ப்பில் தகவல்

Published By: Devika

15 Feb, 2017 | 09:45 AM
image

சொத்துக் குவிப்பு வழக்கு ஏறக்குறைய ஒரு முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரமும் வெளியாகியுள்ளது.

அதில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வீடே சொத்துக் குவிப்புக்கான சதித் திட்டங்களைத் தீட்டும் மையப்புள்ளியாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு மேல், முறையற்ற விதத்தில் சேகரிக்கப்பட்ட பணத்தைக்கொண்டு பல்வேறு நிறுவனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவ்வாறு வாங்கப்பட்ட நிறுவனங்கள் போயஸ் தோட்டத்து வீட்டில் இருந்தே இயக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த நிறுவனங்கள் பற்றி ஜெயலலிதா அறிந்திருக்கவில்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருமே ஜெயலலிதாவுடன் போயஸ் தோட்டத்து வீட்டிலேயே தங்கியிருந்ததால், அவர்களுக்கும் இந்தக் குற்றத்தில் பங்கிருக்கிறது என்பது வெளிச்சமாகிறது. இவர்கள் மூவரும் ஜெயலலிதாவுக்கு இரத்தச் சொந்தங்கள் அல்ல. எனவே, சதியாலோசனைகளை நிறைவேற்றவும் நிழல் வேலைகளைச் செய்யவும் இவர்கள் அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஜெயலலிதாவின் வங்கிக் கணக்குகளில் இருந்து மேற்படி மூவரது கணக்குகளுக்கும் நிழல் நிறுவனங்களின் கணக்குகளுக்கும் பணம் வாரிக் கொடுக்கப்பட்டிருப்பதானது, இந்தச் சொத்துக் குவிப்பில் இவர்களது கூட்டு முயற்சி பெரும் பங்கு வகித்திருப்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52