சலுகை விலையில் அரிசியை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி வேண்டுகோள் 

14 Feb, 2017 | 09:58 PM
image

நாட்டில் ஒருபோதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாத வகையிலும், மக்களுக்கு சலுகை விலையில் அரிசியைப் பெற்றுக்கொடுப்பதற்கான, ஒரு முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி இறக்குமதியாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாவது: 

நாட்டில் அரிசி கையிருப்பை பேணும் வகையில் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை அரசாங்க களஞ்சியசாலைகளில், களஞ்சியப்படுத்திவைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கைத்தொழில் மற்றும் வாணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

அத்தோடு நாட்டில் உள்நாட்டு மற்றும் இறக்குமதிசெய்யப்பட்ட அரிசி வகைகளுக்கு, குறைந்தளவான நிர்ணய விலையை தீர்மானிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பணித்துள்ளார். 

மேலும் அரிசி ஆலை உரிமையாளர்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் மற்றும் அரிசி விலை தொடர்பான பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பான கலந்தாலோசனைகளும் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன், உள்ளிட்ட அரச அதிகாரிகள் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09