முல்லைத்தீவு அம்பகாமம் காட்டு பகுதியிலிருந்து இன்று காலை புலிகள் பயன்படுத்திய ஆட்லறி செல்கள் மீட்கப்பட்டுள்ளன.


விமானப்படையினரால் குறித்த ஆட்லறி செல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையினா் தெரிவித்துள்ளனா்.

ஒவ்வொரு   எறிகணையும்  16 கிலோ கிராம் கொண்டது என்றும் விமானப்படையினா் தெரிவித்துள்ளனா்.


குறித்த அம்பகாமம் காட்டுப்பகுதிக்கு அருகில் தான் 2009 ஆம் ஆண்டுக்கு முன் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய விமானப் படைத்தளம் காணப்படுகிறது. தற்போது அது இலங்கை விமானப்படையினரின் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.