இரண்டு வருட கர்ப்பிணி ஈன்ற ஆட்டுக்குட்டி! நைஜீரியாவில் அதிர்ச்சி சம்பவம்!

Published By: Devika

14 Feb, 2017 | 02:54 PM
image

இரண்டாண்டுகளாகக் கருவுற்றிருந்த பெண் ஒருவர் ஆட்டுக்குட்டியொன்றை ஈன்ற சம்பவம் நைஜீரியாவை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

நைஜீரியாவின் கிராமம் ஒன்றைச் சேர்ந்த இந்த பெயர் குறிப்பிடப்படாத பெண், கருவுற்று பத்து மாதங்கள் தாண்டியபோதும் பிரசவ வலி வராததால் பிரசவத்துக்காகக் காத்திருந்தார் (!). ஆனால், இரண்டு வருடங்கள் கடந்தபோதும் அவருக்குப் பிரசவ வலி ஏற்படவில்லை.

இதனால் பயந்து போன அந்தப் பெண், தமது கிராம சுகாதாரப் பணிமனை ஊழியர்களிடம் உதவி கேட்டார். அதற்கிணங்க அந்தப் பணிமனையைச் சேர்ந்த ஊழியர்கள் குறித்த பெண் குழந்தையைப் பிரசவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

ஆனால், குழந்தைக்குப் பதிலாக ஆட்டுக்குட்டியொன்றை அந்தப் பெண் ஈன்றதைக் கண்டு அந்த ஊழியர்கள் அதிர்ச்சியுற்றனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு அக்கிராம மக்கள் மற்றும் ஊடகத்துறையினர் திரண்டனர். அங்கே, இரத்த வெள்ளத்தில், புத்தம் புதிதாகப் பிறந்த ஆட்டுக்குட்டியொன்று சலனமின்றிக் கிடப்பதைக் கண்டு வியந்தனர்.

ஆனால், பிறந்த அந்த ஆட்டுக்குட்டி தற்போது உயிருடன் இருக்கிறதா, இல்லையா என்ற தகவல்கள் அறியத்தரப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right