சசிகலா தண்டனை குறித்து சினிமா பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். யார், யார் என்ன தெரிவித்திருக்கிறார்கள் என்பதை கீழே பார்க்கலாம்.

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அத்துடன் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 3 பேருக்கும் 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.

இந்த தீர்ப்பு குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்தனர். அதனை கீழே பார்க்கலாம்.

நடிகர் கமலஹாசன்: பழைய பாட்டுத்தான் இருந்தாலும்... என்று குறிப்பிட்டு "தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்.. எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்.."

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் : சட்டம் என் கையில்" என பணம் மார்தட்டிக்கொள்ளவிடாமல், சட்டம் சத்தியத்தின் பக்கமே என போராடிய நீதியின் ஆச்சாரியார்களுக்கு வணக்கமும் நன்றியும்.

வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ்: இது முடிவு இல்லை. தூய்மையின் தொடக்கமே... இன்னும் போக பல மைல்கள் உள்ளன.

நடிகர் அரவிந்த்சாமி: தற்போதைய முதல்வராகிய ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் அலுவலகத்துக்கு செல்வதை பார்க்க ஆவலாக உள்ளது. அவரை முன்மொழிந்து பின்பற்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது பணியை தொடங்க வேண்டும்.

நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்: கடவுள் இருக்கிறார்!! 

நடிகை கவுதமி: ஊழல் வழக்கில் சசிகலா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அம்மாவின் மரணம் குறித்து தகலை அவர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இரு வழக்குகளுக்கும் ஒரே தண்டனை வழங்கக்கூடாது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்: ஓ.பி.எஸ் என்றால் ஓ.பன்னீர் செல்வம் என்று நினைத்தாயா ஆப்ரேஷன் சசிகலா.

இசையமைப்பாளர் சீன் ரோல்டன்: ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான். கை விடமாட்டான். 

ரஜினிகாந்த் : கெட்டவங்களுக்கு நிறைய குடுப்பான். ஆனா, கைவிட்டுடுவான் 

இயக்குநர் சீனு ராமசாமி: அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

காமெடி நடிகர் பால சரவணன்: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... மீண்டும் தர்மம் வெல்லும்... இன்று தர்மம் வென்றது.. கொடியவர்கள் தண்டிக்கபட்டார்கள்... நன்றி இறைவா...

நடிகர் சித்தார்த்: தமிழ்நாட்டுக்கு "மினிமம்" "மினிமம்-சின்னமா" நீதி கிடைத்தது.

நடிகை குஷ்பு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைந்துவிட்டது.

நடிகர் அருள்நிதி: 3 பேர் உள்ளே.... 125  பேர் வெளியே.... பத்தரையுடன் முடிந்தது ஏழரை.

நடிகை ராதிகா சரத்குமார்: மெகா சீரியல்களுக்கு இது மிகப்பெரிய போட்டி.

இவ்வாறு சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.