அம்பலங்கொட - கெபு ஹெல பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பற்ற புகையிரத கடவையை, கடக்க முற்பட்ட பொலிஸ் கெப் ரக வாகனம், புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது வாகனத்தின் இயந்திரம் செயல் இழந்துள்ளது. பிறகு அதில் இருந்த பொலிஸார் இறங்கியுள்ளனர். பின்னரே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.