ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வடக்கு மாகாண சபை கடிதம்

Published By: Robert

14 Feb, 2017 | 09:04 AM
image

மண் மீட்புப் போராட்டத்தில் தொடர்சியாக ஈடுபட்டு வருகின்ற கேப்பாப்புலவு மக்களுக்கு காலம் தாழ்த்தாது உடனடியாகத் தீர்வு வழங்குமாறு கோரி ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வடக்கு மாகாண சபையால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் கடந்த மாகாண சபை அமர்வின் போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் வடக்கு மாகாண சபையினரும் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் போராட்டத்திலும் கலந்து  கொள்வதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய நேற்று முன்தினம் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் நேரடியாக விஐயம் செய்திருந்தனர். இதனையடுத்து நேற்றையதினம் மாகாண சபையில் விசேட கலந்துரையாடலொன்றையும் மாகாண சபையில் மேற்கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் அந்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கான தீர்வை விரைந்து வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் கையெழுத்திட்டு ஐனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு கையெழுத்திட்ட  கடிதத்தையும் அனுப்பி வைத்தனர்.

இதே வேளை கடந்த இரண்டு வாரகாலமாக பல்வேறு கஸ்ர துன்பங்களுக்கு மத்தியிலும் தமது காணிகளை தம்மிடமே மிளக் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி போராடி வருகின்ற மக்களிற்கு உரிய தீர்வை இனியும் காலம் தாழ்த்தாது தீர்வைப் பெற்றுக் கொடுக்க வெண்டுமென பல தரப்பினர்களும் கோரிக்கை விடுத்திருக்கின்ற நிலையில் அத்தகைய கோரிக்கைகளை மீளவும் வலியுறுத்தி மாகாண சபையினர் ஐனாதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08