யுத்தக் குற்ற விசாரணை நீதிமன்றம் அமைப்பதில் அரசு அவசரம் காட்டாது 

05 Jan, 2016 | 08:33 AM
image

யுத்தக் குற்ற விவ­கா­ரத்தில் அர­சாங்கம் எந்­த­ வ­கை­யிலும் அவ­ச­ரப்­ப­ட ­மாட்­டாது. குறிப்­பாக யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்­பி­லான விசேடநீதி­மன்றம் அமைக்கும் பணி­களில் அர­சாங்கம் அவ­சரம் காட்­டாது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் தீர்­மா­னங்­களை அமுல்­ப­டுத்­துதல் தொடர்பில் இந்­திய ஊட­க­மொன்­றுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:

யுத்தம் இடம்­பெற்ற காலத்தில் என்ன நேர்ந்­தது என்­பது மதிப்­பீடு செய்­யப்­பட வேண்­டி­யது முதன்­மை­யா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது. எனவே நிலை­மை­களை மதிப்­பீடு செய்­ததன் பின்­னரே அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்க முடியும். அதனால் முத­லா­வ­தாக நிலை­மை­களை மதிப்­பீடு செய்தல் மிகவும் அவ­சி­ய­மாகும்.

எந்­த­வொரு செயற்­பாட்­டையும் செய்­யு­மாறு எவரும் உத்­த­ரவு எமக்கு பிறப்­பிக்­க­வில்லை. பிரே­ரணை அமு­லாக்­க­மா­னது கூட்டுச் செயற்­பா­டா­கவே அமையும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அனைத்து மக்­க­ளி­னதும் கருத்­துக்­களை அறிந்து அதன் அடிப்­ப­டையில் திருத்­தங்கள் செய்­யப்­படும். இது தொடர்பில் எதிர்­வரும் 9 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை ஒன்றை நான் ஆற்­ற­வுள்ளேன்.

நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள பரந்­து­பட்ட விவா­தங்கள் ஊடாக புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும். இது தொடர்பில் அர­சி­ய­ல­மைப்பு துறைசார் நிபு­ணர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்­பினர் ஆகி­யோ­ருக்கு இடையில் விவா­தங்கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. அதன் பின்­னரே புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவையா? அல்­லது தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்­புக்கு புதிய ஏற்­பா­டு­களை சேர்க்­கப்­ப­டுமா என்­பது குறித்த தீர்­மானம் எடுக்­கப்­படும்.

இதே­வேளை புதிய அர­சி­ய­ல­மைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் உள்­ளீர்க்­கப்­ப­டுமா? அல்­லது நீக்­கப்­ப­டுமா என்ற எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த விடயம் தொடர்பில் விவா­தங்கள் மற்றும் ஆலோ­னைகள் நடத்­தப்­பட்ட பின்­னரே தீர்­மானம் எடுக்­கப்­படும் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் இலங்­கைக்கு அதிகாரத்தை பகிரும் செயற்பாடுகளில் நீண்ட அனுபவம் காணப்படுகின்றது என்றும் எனினும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் முறையான ஆய்வுகளை செய்த பின்னர் இறைமை மற்றும் அக்கறைகளைக்கொண்டே முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19