தமது மகனின் கொலையுடன் தொடர்புடையவர்களை நீதிமன்றத்தின் முன்நிறுத்தி உரிய தண்டணயை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று பஸ்யால பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டு வரக்காப்பொலை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் சடலாமாக கண்டெடுக்கப்பட்ட கட்டுகஸ்தோட்டை இளைஞரின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.

கண்டி கொழும்பு வீதியில் பஸ்யாலை பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டு வரக்காப்பொலை அத்னாவல பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட கட்டுகஸ்தோட்டை செனரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த சிந்தக்க கெலும் அலுகொல்ல என்ற 32 வயதுடைய இளைஞரின் பெற்றோரே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமது மகன் வீட்டில் இருக்கும் எவருக்கும் எவ்வித இன்னல்களை கொடுக்காத ஒரு அமைதியானவர். அவர் பஸ்யால பிரதேசத்திற்கு தொழில் செய்வதற்குச் சென்று இரண்டே மாதங்கள் ஆகின்றன. இவ் இரண்டு மாதங்களில் அவர் எவ்வித தவறும் செய்திருக்க வாய்ப்பிள்ளை. என்வே இது ஒரு கொடூரமான கொலையாகும் எனவே இக் கொலையுடன் தொடர்புடைய அனைவருக்கும் உச்ச கட்ட தண்டனையை வழங்க வேணடும் என்று சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் தந்தை கேட்டுக்கொண்டார்.

கண்டி நுகவெல மத்திய கல்லூரியில் உயர் தரம் வரை கல்வி கற்றுள்ள இவர் சாதாரண தரப் பரீட்டையில் மிக உயர் மட்டத்தில் சித்தி பெற்றுள்ளதாகவும் தந்தை தெரிவித்தார்.

பஸ்யால பிரதேசத்தில் அமைந்துள்ள சொசேஜஸ் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றியுள்ள இவர் கடந்த் 9 ஆம் திகதி இரவு வீட்டுக்கு வருவதற்குவரும் வழியில் கொலை செய்யப்பட்டு வரக்காப்பொல அத்னாவல பிரதேசத்தில கொல்லப்பட்ட நிலையில் 10 திகதி காலை பொலீஸார் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் தொடர்பான விசாரணைகள் முடிவடையாதநிலையில் சடலம் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது தந்தை தெரிவித்தார்.