இராணுவத்திடமிருந்து விரைவில் எமது காணிகளை விடுவிக்க உரிய தரப்பினர்  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இல்லையேல் பல்வேறு வடிவங்களில் போராட்டத்தை  முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோமே தவிர சற்றும் பின்வாங்கி எமது போராட்டத்தை கைவிடமாடடோம் என இன்று 13ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.   

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள  விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக  கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது சிறுவர்கள்,குழந்தைகள் ,முதியவர்கள் ,பெண்கள் என அனைவரும் கடந்த 31.01.2017 தொடக்கம்  தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.