இலங்­கையைச் சேர்ந்த முஸ்லிம் நபர்கள் 36 பேர் ஐ.எஸ். அமைப்பில் சென்று இணைந்­து கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் விவகாரம் தொடர்பில் புல­னாய்வு அதி­கா­ரிகளின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அமைய சரி­யான வகை யில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்போம். எவ்­வாறு இருப்­பினும் உறு­தி­யான வகையில் இந்த தக­வல்கள் கிடைக்­காத நிலையில் அவை தொடர்பில் ஆராய்ந்தே தீர்­மானம் எடுக்க முடியும் என பாது­காப்பு இரா­ஜாங்க  அமைச்சர் ருவான் விஜே­ய­வர்­த்தன தெரி­வித்தார்.

இந்த விவ­காரம் தொடர்பில் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன மேலும் தகவல் தரு­கையில்

கடந்த வாரமும் இந்த முறைப்­பா­டுகள் எமக்கு கிடைத்­தி­ருந்­தன. தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான வகையில் இவ்­வா­றான செயற்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் அலட்­சி­ய­மாக செயற்­பட முடி­யாது. மேலும் கடந்த காலத்­திலும் ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பின் கூட்­ட­ணியில் இலங்­கையை சேர்ந்த நபர்கள் உள்­ள­தாக தக­வல்கள் வெளி­வந்­தன.

இப்­போதும் புல­னாய்வு பிரிவின் தக­வல்கள் அவ்­வாறு வெளி­யிட்­டுள்­ள­தாக தெரி­விக்கப் படு­கின்­றது. ஆகவே இந்த விவ­காரம் தொடர்பில் நாட்டில் புல­னாய்வு அதி­கா­ரி­களின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அமைய சரி­யான வகையில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்போம். எவ்­வாறு இருப்­பினும் உறு­தி­யான வகையில் இந்த தக­வல்கள் கிடைக்­காத நிலையில் அவை தொடர்பில் ஆராய்ந்தே தீர்­மானம் எடுக்க முடியும் எனக் குறிப்­பிட்டார்.

இந்­நி­லையில் இந்த விவ­காரம் தொடர்பில் பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்­கிய செவ்வி ஒன்றில் இலங்கை பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­ராச்சி குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையில் முஸ்லிம் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக சர்­வ­தேச நாடு­களின் புல­னாய்வு தக­வல்கள் எமக்கு கிடைத்­துள்­ளன. அதற்­க­மைய நாமும் ஆராய்ந்து வரு­கின்றோம். எனினும் அண்­மையில் இலங்­கையை சேர்ந்த 36 முஸ்லிம் நபர்கள் இர­க­சி­ய­மாக சிரி­யாவை சென்­ற­டைந்­துள்­ளனர். அவர்­களில் பலர் ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்பில் இணைந்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் கிடைக்­க­பெற்­றுள்­ளன. அதேபோல் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு இஸ்­லா­மிய புனித பயணம் மேற்­கொண்டு செல்­வ­தாக கூறிக் சிறு­வர்­களும், பெண்­களும், வய­தா­ன­வர்­களும் இவ்­வாறு பயங்­க­ர­வாத குழுக்­களை சென்­ற­டை­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன.

எனினும் இவர்கள் அனை­வரும் ஒன்­றாக பய­னித்­தார்­களா, அல்­லது தனித்­த­னி­யாக பய­ணித்­தார்­களா என்­பது தொடர்பில் எமக்கு தெளி­வான தகவல் கிடைக்­க­வில்லை என குறிப்­பிட்டார்.

எவ்­வாறு இருப்­பினும் கடந்த காலங்­களில் சர்­வ­தேச அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு இலங்­கையை தள­மாக இலங்­கையில் 9 குடும்­பங்­களை சேர்ந்த 45 நபர்கள் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்பு வைத்­துள்­ள­தா­கவும் கிழக்கில் மட்டுமில்லாது குருநாகல், கண்டி, கொலன்னாவை, தெகிவளை பகுதிகளை சேர்ந்த நபர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத குழுவில் தொடர்புகொண்டுள்ளதாகவும் கடந்த வாரம் புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டதாக தெரிவிக்கப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

.