இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபைக்கு கடந்த ஆண்டு 400 மில்லியன் வருமானம்

Published By: Robert

12 Feb, 2017 | 12:40 PM
image

கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கிய இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை கடந்த 2016ல் 400 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைத் தலைவரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால தெரிவித்தார்.

நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அவர் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் சங்கப் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடினார். சங்கத்தின் தலைவர் என்.பி.ரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சங்கத்தின் செயலாளர் வீ.பிரதீபன் பாபு உட்பட கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை நிருவாகிகள் மாவட்ட கிரிக்கட் சபை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பேசிய அவர் கிழக்கு மாகாணத்திற்கான கிரிக்கட் பயிற்சி நிலையம் மட்டக்களப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கென 20 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளேன். கிழக்கு மாகாணத்தில் கிரிக்கட் விளையாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கட்ட கட்டுப்பாட்டுச் சபை பயிற்றுவிப்பாளர் சைமன் உட்பட பலர் உரை நிகழ்த்தினர்.

மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் சங்கத்திற்கு கிரிக்கட் உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன. திலங்க சுமதிபால பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22