குழந்தையின்மை : ஆண்களுக்கான பிரச்சினைகளும் அவற்றுக்கான சிகிச்சைகளும்

Published By: Robert

12 Feb, 2017 | 11:12 AM
image

குழந்­தைகள் இல்­லாத வீடு பாலை­வ­னமாய் வெறிச் சோடி­யி­ருக்கும். எத்­தனை செல்வம் இருந்­தாலும் குழந்தைச் செல்வம் இல்­லை­யென்றால் அந்த வாழ்க்­கையில் ஒரு­வித வெறுமை இருந்­து­கொண்டே இருக்கும். அவ்­வாழ்க்கை பூரணத்துவம் அடை­யாது. மேலும், குழந்தைச் செல்­வத்­துக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்கும் நம் சமூ­கத்தில், குழந்­தை­யின்­மையால் பாதிக்­கப்­பட்ட பெண்­களும் சரி, ஆண்­களும் சரி முகங்­கொ­டுக்கும் சங்­க­டங்கள் எண்­ணி­ல­டங்கா! இந்தச் சங்­க­டங்­க­ளையும் கவ­லை­க­ளையும் போக்­கவே செயன்­முறைக் கருத் தரிப்பு என்ற நவீன தொழி­ல் நுட்பம் கண்டு பிடிக்­கப்­பட்­டது.

Image result for குழந்தையின்மை : ஆண்களுக்கான பிரச்சினை

இயற்­கை­யான கருத்­த­ரிப்­புக்கும் செயன்­முறைக் கருத்­த­ரிப்­புக்கும் வித்­தி­யாசம் ஒன்று தான்! உட­லுக்குள் நடை­பெறும் கருமுட்டையும் உயி­ர­ணுவும் ஒன்­றி­ணையும் நிகழ்வு, ஆய்­வ­கத்தில் நடத்­தப்­ப­டு­கி­றது. 

இது தான் அந்த வித்தியாசம். இத­யத்­துக்கு வரும் இரத்த நாளங்­களில் ஒன்று அடை­பட்டு மார­டைப்பு ஏற்­பட்டால், அதற்கு வேறொரு குழாயைப் பொருத்தி அதன் மூலம் இரத்­தத்தை ஓடச் செய்கிறோ­மல்­லவா? அதற்கு ஒப்­பா­னதே இதுவும்!

குழந்­தை­யின்­மைக்கு சுமார் அறு பது சத­வீதம் ஆண்­களே கார­ணமா கிறார்கள் என்­பது நிரூ­ப­ண­மான ஒன்று. உயி­ரணு எண்­ணிக்கை குறைவு, உயி­ர­ணுவின் நீந்தும் தன்மை குறைவு, உயி­ர­ணுவின் அமைப்பில் குள­று­படி என்­ப­னவே ஆண்­களைப் பாதிக்கும் பிர­தான குழந்­தை­யின்மைக்கான கார­ணிகள்! 

முன்­னைய காலங்­களில் இது போன்ற பிரச்­சினை உள்­ளவர் களுக்கு உயி­ரணு தானம் - அதா­வது, பிற ஆண் ஒரு­வ­ரு­டைய உயி­ர­ணுவைப் பெற்­றுக்­கொண்டு அதன் மூலமே குழந்தை பெற வேண்­டி­யி­ருந்­தது. ஆனால் இப்­போது அதற்­கான அவ­சியம் இல்லை. ஆண்­களின் குறை­பா­டு­களைச் சரி­செய்யும் அள­வுக்கு தற்­போது மருத்­துவ விஞ்­ஞானம் வளர்ந்­தி­ருக்­கி­றது. எனவே, குழந்­தை­யின்­மையால் பாதிக்­கப்­பட்ட ஆண்கள் கவ­லையே இல்­லாமல் சிகிச்சை பெற்­றுக்­கொண்டு குழந்­தை­க­ளுக்குத் தகப்­ப­னா­கலாம்.

குழந்­தை­யின்­மையால் ஒரு ஆண் பாதிக்­கப்­பட்­டுள்­ளாரா? என்­பதை அவ­ரது இரத்­தத்­தையும் ஏனைய சுரப்­பி­க­ளையும் பரி­சோ­திப்­பதன் மூலம் அறிந்­து­கொள்­ளலாம். உதார ணமாக, தைரொய்ட் சுரப்­பியில் ஏதேனும் குள­று­ப­டிகள் இருந்தால் அதற்­கான மருந்­து­க­ளையோ அல்­லது ஊசி மருந்­து­க­ளையோ கொடுத்து அதைச் சரி­செய்­து­வி­டலாம்.

சில­ருக்கு, விந்து வளர்ச்­சியில் பங்கு வகிக்கும் ஹோர்மோன் பாதிக்­கப்­பட்­டிருக்கலாம். இது போன்­ற­வர்­க­ளுக்கு குறிப்­பிட்ட ஹோர்­மோனை ஆரோக்­கி­ய­மான முறையில் சுரக்கச் செய்­வ­தற்­கான மருந்­துகள் வழங்­கு­வதன் மூலம், அவ­ரது விந்­த­ணுக்­களை போதிய வளர்ச்சி பெறச் செய்­யலாம். இதனால், தனது உயி­ர­ணு­வி­லி­ருந்தே குழந்தை பெற் றுக்­கொள்ளும் வாய்ப்பு அவ­ருக்குக் கிடைக்கும்.

விந்­தணுப் பரி­சோ­தனை என்­பது, முன்­னொரு காலத்தில் வருடக் கணக்கில் செய்­யப்­படும் ஒரு பரி­சோ­த­னை­யாக இருந்­தது. ஆனால் இன்று அப்­ப­டி­யல்ல! ‘கம்ப்­யூட்­டரைஸ்ட் செமன் அனா­லிஸிஸ்’ (Computerized Semen Analysis), அதா­வது கணினி முறை­யி­லான விந்­தணுப் பரி சோதனை வந்­து­விட்­டது. இதன் மூலம் ஓரிரு மணித்­தி­யா­லங்­களில் விந்­தணுப் பரி­சோ­த­னையைச் செய்­து­ விட முடி­கி­றது. இதனால், குழந்­தை­யின்­மையை நீக்கும் சிகிச்­சை­களை உட­ன­டி­யா­கவே ஆரம்­பித்து விடவும் முடி­கி­றது.

ஆணின் விந்­த­ணுவில் பதி­னைந்து மில்­லியன் உயி­ர­ணுக்கள் இருப்­பது அவ­சியம். அவற்றில் நாற்­பது சத­வீ­த­மா­னவை நன்கு நீந்தும் திறன் கொண்­ட­ன­வாக இருப்­பதும் அவ­சியம். மேலும், அந்த நாற்­பது சத­வீ­தத்தில் நான்கு சத­வீ­த­மான உயி­ர­ணுக்கள் சிறந்த அமைப்பைக் கொண்­ட­ன­வாக இருக்க வேண்டும்.

கணினி முறை­யி­லான விந்­தணுப் பரி சோத­னையில் உயி­ர­ணுக்கள் சுமார் ஏழாயிரம் மடங்கு பெரிதுபடுத்திப் பார்க்கப்படு­வதால் சிறந்த அமைப்பும் நீந்தும் தன்­மையும் கொண்ட உயி­ர­ணுக்­களைத் தெரிவு செய்ய முடி­கி­றது. இதனால் ஓரிரு முயற்­சி­க­ளி­லேயே செயன்­முறைக் கருத்­த­ரிப்பு அவர்­க­ளுக்குக் கைகூடு கிறது.

இப்­போது,‘டி.என்.ஏ. ஃப்ரேக் மன்­டேஷன்’ (DNA Fragmentation) என்ற பரி­சோ­த­னையும் செய்யப்படு­கி­றது. இது, ஒரு­வ­ரது உயி­ர­ணுவில் உள்ள மர­பணுக் குறை­பா­டு­களைக் கண்­ட­றிந்து குறித்த உயி­ர­ணுக்­களைத் தவிர்க்­கவோ அல்­லது அந்தக் குறை பாடு­களைச் சரி­செய்து செயன்­முறைக் கருத்­த­ரிப்பில் பயன்­ப­டுத்­தவோ முடிகிறது. சில ஆண்­களின் விந்­தணுப் பரி­சோ­த­னை­களின் முடி­வு­களில், உயி­ர­ணுக்­களே இல்லை என்று தெரி­ய­வரும். இது தெரி­ய­வந்­ததும், ‘உயி­ரணு இல்­லாமல் எப்­படி குழந்­தைக்குத் தகப்­ப­னாக முடியும்’ என்ற கவலை மனதைப் போட்டுக் குடையும். ஆனால், இனி அந்த பய மும் இல்லை!

உயி­ர­ணுக்கள் இல்­லாத ஆண் களுக்கு ேஹார்மோன் பரி­சோ­தனை களுடன் கூடவே ‘டெஸ்ட்டிக்கியூலர் பயொப்ஸி’ (Testicular Biopsy) என்ற ஒரு பரி­சோ­த­னையைச் செய் வோம். அதில், விரைப்­பையில் இருந்து கொஞ்­சமே கொஞ்சம் சதையைச் சுரண்­டி­யெ­டுத்து, அதில் 

உள்ள உயி­ர­ணுக்­களைத் தேடி யெடுப்போம். 

இவ்­வாறு தேடித் தேடிச் சேக ரிக்கும் உயி­ர­ணுக்­களை போதிய முறையில் வலு­வூட்டி அதைக் கொண்டே அவர்­க­ளுக்கு செயன் முறைக் கருத்­த­ரிப்பு சிகிச்­சை­களைச் செய்வோம். இதனால், 

உங்­க­ளு­டைய உயி­ர­ணுவில் இருந்தே உங்­க­ளுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்பு ஏற்­ப­டுத்தித் தரப்­ப­டு­கி­றது. எனவே உயி­ரணு இல்லை எனும் பிரச்­சி­னையை எதிர்­நோக்கும் ஆண்கள் இனி அது குறித்து பயப்­படத் தேவை­யில்லை.

ஒரு­வேளை பயொப்ஸி முறை யில் பரி­சோ­தனை செய்தும் உயி­ர­ணுக்கள் இல்லை எனத் தெரிந்தால் அவர்­க­ளுக்கு விந்­தணு தானம் மூலம் குழந்­தைப்­பேற்றை உரு­வாக்­கலாம். ஆண் ஒரு­வரை -அவர், தெரிந்­த­வ­ரா­கவோ, தெரி­யாத வரா­கவோ, உற­வி­ன­ரா­கவோ கூட இருக்­கலாம் - முழு­மை­யாகப் பரி­சோ­தனை செய்து, அவ­ரது உயிரணுக்­களில் குறை­பா­டுகள் ஏதும் இல்லை என்றும், அவர் முழு­மை­யான ஆரோக்­கியம் உடை­யவர் என்றும் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பின், அவ­ரது உயி­ர­ணுவை எடுத்து கர்ப்­பப்­பையில் செலுத்தி கரு­வுற வைக்­கலாம். சில ஆண்­க­ளுக்கு உட­லு­றவுச் செயற்­பாட்­டில்தான் தடுமாற்­றங்­களும் குறை­பா­டு­களும் இருக்­கலாம். இது கூட குழந்தையின்­மைக்கு வழி­கோ­லலாம். இவ்வாறான­வர்­க­ளுக்கு தகுந்த ஆலோ­சனை மற்றும் ‘வைப்­ரேட்டர்’ (Viberator) மூலம் சில ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் வழங்­கி குழந்தைப் பேற்றை உரு வாக்க முடியும்.

குழந்­தை­யின்­மையில், ஆண்கள் எதிர்­நோக்கும் குறை­பா­டு­களைச் சரி­செய்­வது என்­பது இன்­றைய நவீன மருத்­துவத்துறையில் சாத்­தி­யக்­கூ­றுகள் அதிகம் உள்ள ஒன்­றா­கவே காணப்­ப­டு­கி­றது. எதிர்வரும் மார்ச் மாதம் 3, 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள மருத்துவ கண்காட் சியில் நானும் பங்குபற்றுகிறேன். நீங்கள் விரும்பினால் அங்கு நேரடி யாகவே என்னைச் சந்தித்து உங்கள் பிரச்சினைகளுக்கு ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும்.

-

குருசாமி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32
news-image

ட்ரைஜெமீனல் நியுரால்ஜியா எனும் முக நரம்புகளில்...

2024-04-05 09:27:49