உரிய நட­வ­டிக்கை இன்றேல் வேலை நிறுத்தப் போராட்டம் : தனியார் பஸ் சேவை­யாளர் சங்கம்

Published By: Robert

12 Feb, 2017 | 10:28 AM
image

தென் கிழக்கு கரை­யோர பிர­தே­சங்­களில் தனியார் பஸ் சேவை­களில் ஈடு­பட்டு வரும் பஸ் உரி­மை­யா­ளர்கள் பல்­வே­றான பிரச்­சி­னை­க­ளுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வரு­வ­தா­கவும், இதற்­கென சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கு­மாறு கோரியும், தவறும் பட்­சத்தில் வேலை நிறுத்­தத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர். 

Image result for bus strike virakesari

இது தொடர்பில்  நேற்று  அக்­கரைப்­ பற்றில் தென்­கி­ழக்கு கரை­யோர மாவ ட்ட தனியார் பஸ் உரி­மை­யா­ளர்கள் சங்­கத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இவ் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது அவ் அமைப்பின் செயற்­பாட்­டாளர் எம்.எஸ்.பைறூஸ் கூறி­ய­தா­வது, 

கடந்த காலங்­களில் இலங்கைப் போக்­கு­வ­ரத்து அதி­கார சபை­யி­ன­ருக்கும் தனியார் பஸ் உரி­மை­யா­ளர்கள் சங்­கத்­தி­ன­ருக்­கு­மி­டையில் பஸ்­களை சேவையில் ஈடு­ப­டுத்தும் விட­யத்தில் பல்­வே­றான பிரச்­சி­னைகள் எழுந்­தன. இப்­பி­ரச்­சி­னை­களை பல்­வேறு தரப்­பி­ன­ருக்கும் அறி­யப்­ப­டுத்­தியும் எவ்­வித தீர்வும் எட்­டப்­ப­ட­வில்லை. இதனால் வாகரை நீதி மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் அடிப்­ப­டையில் இவ்­விரு சாராரும் ஒன்­றி­ணைந்த சேவையில் ஈடு­ப­டு­மாறு நீதிமன்றம் உத்­த­ர­விட்­டது. இதற்­க­மை­வாக எவ்­ வித பிரச்சி­னை­களும் இன்றி பொது­மக் கள் சேவை இடம்­பெற்று வந்­தது.

இருந்த போதிலும் அண்­மையில் கல்­மு­னையில் இருந்து வாகரை ஊடாக திரு­கோ­ண­ம­லைக்குச் செல்லும் போக்­கு­வ­ரத்து சேவைக்கு புறம்­பாக சொகுசு பஸ் என்ற போர்­வையில் இரண்டு புதிய பஸ் வண்­டி­க­ளுக்கு அதி­கா­ரிகள் அனு­மதி வழங்­கி­யுள்­ளனர். இதனால் ஏலவே இவ்­வழி ஊடாக சேவையில் ஈடு­படும் பஸ் உரி­மை­யா­ளர்கள் பல்­வே­றான சிர­மங்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர். ஏற்­க­னவே சேவையில் ஈடு­படும் பஸ் வண்­டி­க­ளுக்கு போதிய வரு­மானம் அற்ற நிலையில் புதிய பஸ் வண்­டிகள் சேவையில் ஈடு­ப­டு­வதால் எமது வாழ்­வாதாரம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கின்­றனர்.

ஏற்­க­னவே இப்­பாதை ஊடாக  இலங் கை போக்­கு­வ­ரத்து சபைக்குச் சொந்­த­மான 14பஸ் வண்­டி­களும், தனியார் பஸ் உரி­மை­யா­ளர்­களின் 21 பஸ்­வண்­டி­களும் சேவையில் ஈடு­பட்டு வருகின்றன. 

இதற்கு மேல­தி­க­மாக குறிப்­பிட்ட நேரத்­தினை மையப்­ப­டுத்தி இரண்டு புதிய சொகுசு பஸ்கள் தற்­கா­லிக அனு­ம­தியின் பேரில் சேவையில் ஈடு­பட்டு வரு­வதால் பல்­வே­றான வீதி விபத்­துக்­களும் இன்­னோ­ரன்ன பிரச்­சி­னை­களும் எழுந்­துள்­ளன.

தனியார்  சொகுசு பஸ்­களை சேவை யில் ஈடு­ப­டுத்­து­வ­தாக இருந்தால் அவ ற்றை ஏற்­க­னவே அனு­மதி பெற்ற உரி­மை­யா­ளர்­க­ளுக்கு  வழங்­கினால் புதி­தாக எவ்­வித பிரச்­சி­னையும் எழுவ தற்கான வாய்ப்பில்லை எனக் குறிப்பி டும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தினர், தமக்கு நெருங்கிய நண்பர்க ளுக்கு, சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளுக்கு மேலதிகமாக சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அனுமதி யினை வழங்குவது கண்டிக்கத்தக்க விடயம் என சுட்டிக்காட்டுகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58