சைட்டம் அதிகாரி திடீரென வெளிநாட்டு பயணம் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள துப்பாக்கி சூட்டு சம்பவம்

Published By: MD.Lucias

11 Feb, 2017 | 11:02 AM
image

மாலபே தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்தின் (சைட்டம்) பிர­தான நிறை­வேற்று அதி­காரி வைத்­தியர் சமீர சேனா­ரத்­னவின் கார் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சமீர சேனா­ரத்ன திடீரென வெளிநாட்டுக்கு சென்றுள்ளமையானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீர சேனா­ரத்ன கடந்த 6 ஆம் திகதி இரவு பல்­க­லையில் இருந்து வீடு திரும்பும் போது, கல்­லூ­ரியில் இருந்து சுமார் 750 மீற்றர் தூரத்தில் உள்ள சந்­தி­ரிகா குமா­ர­துங்க மாவத்­தைக்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்து இரு இனந்தெரியாத நபர்கள் சமீர சேனா­ரத்ன மீது துப்­பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் வைத்­தியர் சமீர சேன­ராத்­ன­வுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. 

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சிறப்பு பொலிஸ் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு,  சம்பவ தினத்தன்று சமீர அணிந்திருந்த ஆடைகளை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர்கள் நேற்று பரிசோதனைக்காக பெற்றுக் கொண்டிருந்தனர்.

'சைட்டம் நிறுவனத்தில் இருந்து விலகுமாறும் இல்லா விட்டால் கொலை செய்யப்படுவேன் என தனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் இறுதியாக தொலைப்பேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திய நபர் “நான் எமன் பேசுகிறேன்.  உன்னை கொலை செய்ய போகிறேன்' என அச்சுறுத்தல் விடுத்ததாகவும் சமீர சேன­ராத்ன தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும் சில தரப்பினர் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒரு நாடகம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று  சமீர சேன­ராத்ன திடீரென ரஷ்யாவிற்கு பயணம் செய்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58