மு.கா.வின் பேராளர் மாநாடு நாளை : உத்­தி­யோ­க­பூர்வ செய­லா­ள­ராக ஹஸன்­ அலி

Published By: Priyatharshan

11 Feb, 2017 | 10:35 AM
image

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கத்­திற்கு முன்­னை­யதைப்போல் சகல அதி  ­கா­ரங்­க­ளையும் வழங்கும் வகையில் கட்­சியின் யாப்பில் திருத்தம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது. அந்த யாப்பு திருத்தம் நாளை நடை­பெ­ற­வுள்ள கட்­சியின் பேராளர் மாநாட்­டின்­போது மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பேராளர் மாநாடு நாளை காலை 9.30 மணிக்கு கொழும்­பி­லுள்ள பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

அம்­மா­நாட்டில் நாடு தழு­விய ரீதி­யி­லி­ருந்து வருகை தரும் கட்சி உறுப்­பி­னர்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். அத்­துடன் நாளைய பேராளர் மாநாடு தீர்க்­க­மான ஒன்­றாக அமை­ய­வுள்­ளது. ஏனெனில் கட்­சியில்  அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்­று­வரும் உத்­தி­யோ­க­பூர்வ செய­லாளர் தொடர்பில் முக்­கிய தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. 

இறு­தி­யாக நடந்த பேராளர் மாநாட்­டின்­போது கட்­சியின் உயர்­பீ­டச்­செ­ய­லாளர் பதவி ஒன்று உரு­வாக்­கப்­பட்­டது. எனவே கட்­சியின் செய­லாளர் நாய­கத்தின் அதி­கா­ரங்கள் உயர்­பீ­டச்­செ­ய­லா­ள­ருக்கு பகி­ரப்­பட்டு செய­லாளர் நாய­கத்தின் அதி­கா­ரங்கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டது. மேலும் குறித்த விட­யத்தில் கட்­சியின் தலை­வ­ருக்கும் செய­லாளர் நாய­கத்­திற்­கு­மி­டையில் இழு­பறி நிலை ஏற்­பட்­ட­துடன் அப்­பி­ரச்­சினை சுயாதீன் தேர்தல் ஆணைக்­குழு வரையில் சென்­றது.

எனவே செய­லாளர் விவ­கா­ரத்தில் மாற்றம் மேற்­கொள்ள வேண்­டு­மாயின் அது பேராளர் மாநாட்டில் நிறை­வேற்­றப்­படும் யாப்பு திருத்­தத்தின் மூலமே அதனைச் செய்ய வேண்டும் என தலைவர் ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்தார்.

ஆகவே நாளைய பேராளர் மாநாட்டின் போது செய­லாளர் நாய­கத்­திற்கு முன்­னை­ய­தைப்போல் முழு அதி­காரம் வழங்கும் நோக்கில் யாப்பு திருத்தம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. 

அத்­துடன் பேராளர் மாநாட்டில் கட்­சியின் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டு உறுப்­பி­னர்கள் ஒப்­புதல் பெறப்­ப­ட­வுள்­ளது. இதே­வேளை கட்­சியின் கட்­டாய உயர்­பீ­டக்­கூட்டம் இன்று மாலை கட்சியின் உயர்பீடமான தாருஸ்ஸலாத்தில் நடைபெறவுள்ளது. அதன்போது நாளைய பேராளர் மாநாட்டில் முன்வைக்கவுள்ள முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13