ஒருமணி நேரமாக புதருக்குள் புதையுண்டிருந்த விவசாயி ஒருவர்,தான் பயின்ற யோகா பயிற்சியின் மூலம் உயிர்தப்பிய சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. 

அவுஸ்திரேலியாவில்  சிட்னியை சேர்ந்த டேனியல் மில்லர் என்ற விவசாயி, 3 டன் நிறையுடைய இயந்திரத்தை செலுத்திச் சென்றபோது  ஒருபுதர் நிறைந்த பகுதியில் விழுந்துள்ளார்.

இந்நிலையில் புதரில் சிக்குண்டுள்ள மில்லர் தன பயின்ற யோகா பயிற்சியின்  மூலம், மூச்சை அடக்கி கையை மேல் நோக்கி தள்ளிய நிலையில்,  தன்னை காப்பாற்றும்படி சத்தமிட்டுள்ளார்.

அவரின் சத்தம் கேட்டு வந்த  மீட்பு குழுவினர், புதரில் மூழ்கிக்கிடந்த மில்லரை காப்பாற்றியுள்ளனர். குறித்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ள அவர் தான் பயின்ற யோகாதான், தன் உயிரை காப்பாற்றியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.