அனுராதபுரம் - புத்தளம் வீதியின் போதானேகம விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

காரொன்று மிதிவண்டியுடன் மோதியதில், மிதிவண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் படுகாயத்துக்குள்ளான குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 61 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.