மெதிரிகிரிய - யுதகனாவ வனப்பகுதியில் மரப்பொந்துக்குள் இருந்து ஒருதொகை வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மரப்பொந்துக்குள் இருந்து 66 ரி.56 ரக துப்பாக்கி ரவைகள் , 65 எம்.பி.என்.ஜி. ரவைகள் , மூன்று 84எஸ் வகை ரவைகள் , விமான எதிர்ப்பு ஏவுகனை மற்றும் கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விமானப்படை அதிகாரிகள் கொடுத்த தகவலுக்கு அமைய குறித்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.