அப்புத்தளை - பம்பரகந்த நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்குச் சென்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் ஹோமாகமை பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

பம்பரகந்த நீர்விழ்ச்சியை பார்வையிடுவதற்காக சுற்றுலா சென்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலத்தை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.